TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணிதவியல் — வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு \(3\pi\) செ.மீ\(^3\) என்ற வீதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் \(\dfrac{1}{2}\) செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம் (செ.மீ/வி):
Q2
ஒரு பலூன் செங்குத்தாக மேல்நோக்கி \(10\) மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து \(40\) மீ தொலைவில் இருந்து ஒருவர் இதைப் பார்க்கிறார். பலூன் தரையிலிருந்து \(30\) மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, பார்வையாளரிடம் ஏற்படும் ஏற்றக் கோணத்தின் மாறுபாட்டு வீதம் (ரேடியன்கள்/வினாடி):
Q3
\(t\) என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை \(s(t)=3t^{2}-2t-8\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம் \(t=\):
Q4
ஒரு கல் செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. \(t\) நேரத்தில் அது அடைந்த உயரம் \(x=80t-16t^{2}\). கல் அடையும் அதிகபட்ச உயரத்தை அடைந்தால் \(t\)-ன் மதிப்பு:
Q5
\(6y=x^{3}+2\) என்ற வளைவரையின் எப்புள்ளியில் \(y\)-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் \(x\)-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல \(8\) மடங்கு இருக்கும்?
Q6
\(f(x)=\sqrt{8-2x}\) என்ற வளைவரையின் எந்த \(x\)-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு \(-0.25\) ஆக இருக்கும்?
Q7
\(f(x)=2\cos 4x\) என்ற வளைவரைக்கு \(x=\dfrac{\pi}{12}\)-ல் செங்கோட்டின் சாய்வு:
Q8
\(y^{2}-xy+9=0\) என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைக்குத்தாக (செங்குத்தாக) இருக்கும்?
Q9
ஆதியில் \(y^{2}=x\) மற்றும் \(x^{2}=y\) என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம்:
Q10
\(\displaystyle\lim_{x\to 0}\left(\cot x-\dfrac{1}{x}\right)\)-ன் மதிப்பு:
Q11
\(\sin^{4}x+\cos^{4}x\) என்ற சார்பு இறங்கும் இடைவெளி:
Q12
\(f(x)=x^{3}-3x^{2},\ x\in[0,3]\) என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் \(c\)-யின் மதிப்பு:
Q13
\(f(x)=\dfrac{1}{x},\ x\in[1,9]\) என்ற சார்பிற்கு சராசரி மதிப்புத் தேற்றத்தை நிறைவு செய்யும் \(c\)-யின் மதிப்பு:
Q14
\(f(x)=|3-x|+9\) என்ற சார்பின் குறைந்த (சிறும) மதிப்பு:
Q15
\(y=e^{x}\sin x,\ x\in[0,2\pi]\) என்ற வளைவரையின் மீப்பெரு சாய்வு எங்கு அமையும்?
Q16
\(f(x)=x^{2}e^{-2x},\ x>0\) என்ற சார்பின் பெரும (மீப்பெரு) மதிப்பு:
Q17
\((6,0)\) என்ற புள்ளிக்கும் \(x^{2}-y^{2}=4\) என்ற வளைவரை மீதுள்ள புள்ளிக்கும் உள்ள தொலைவு குறைந்தபட்சம் எனில் அப்புள்ளி:
Q18
இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் \(200\) ஆக இருக்கும்போது அவற்றின் பெருக்கல் பலனின் பெரும (மீப்பெரு) மதிப்பு:
Q19
\(y=ax^{4}+bx^{2}\) (இங்கு \(ab>0\)) என்ற வளைவரைக்கு:
Q20
\(y=(x-1)^{3}\) என்ற வளைவரையின் வளைவு மாற்றப் புள்ளி (inflection point):

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் test

This free online practice test covers வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் from the 12ஆம் வகுப்பு கணிதவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணிதவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அணிகள் மற்றும் அணிக்கோ ைவகளின் பயன்பாடுகள் 2 கலப்பு எண்கள் 3 சமன்பாட்டியல் 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் 5 இரு பரிமாண பகுமுறை வடிவியல்-II 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் 8 வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் 9 தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 10 சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் 11 நிகழ்தகவு பரவல்கள் 12 தனிநிலைக் கணிதம்